Thursday, April 24, 2025

பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு 


இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு வானியல் தொடர்பான நமது அடிப்படைப் புரிதலைக்கூட மீண்டும் ஒருமுறை கேள்வி கேட்க வைத்துவிடும்.

இந்த ஆய்வின் முதல்கட்ட கண்டுபிடிப்பு, தற்போது அனைவரும் பின்பற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது.

இதன் முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் நிறைய தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் மதிக்கத் தகுந்த ஆய்வாளர்களான லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓபர் லஹவ் போன்றோர்கூட கிடைக்கும் தரவுகளைக் கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கியுள்ளனர்

இருண்ட ஆற்றல் என்பது என்ன?




ஓபர் லஹவின் கருத்துப்படி, "இதுவரை பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முன்மாதிரியாக இருந்த புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்."

இருண்ட ஆற்றல் என ஒன்று இருப்பது கடந்த 1998ஆம் ஆண்டில் தெரிய வந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவரை, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்வுக்குப் பிறகு ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையும் என்றே நம்பப்பட்டது. பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்க முயல்கிறது.

ஆனால், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இதன் விரிவாக்கம் மேலும் வேகமடைந்து வருகிறது.

இது ஏற்படக் காரணமாக இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாததாலும், அதைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் அதற்கு இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று பெயர் சூட்டினர்.


இருண்ட ஆற்றல் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருப்பதால் அறிவியலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மர்மமாக அது இருக்கிறது.

இதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியின் உருவாக்கம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. இது அரிசோனாவில் உள்ள டூசான் நகரத்தில், கிட் பீக் தேசிய கண்காணிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, 5,000 ஒளியியல் இழைகளைக் (optical fibres) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒளியியல் இழையும் ரோபோட்கள் மூலம் கேலக்ஸிகளை அதிவேகத்தில் கண்காணிக்கின்றன.

கடந்த ஆண்டு, இந்தக் கருவியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இருண்ட ஆற்றல் வெளிப்படுத்திய ஆற்றல் காலப்போக்கில் மிகவும் மாறுபட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதலில், சராசரியாகக் கிடைக்கும் தரவுகளில் ஏற்பட்ட சிறு பிசகல் என்றே இதை அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் "பிசகல்" மேலும் வளர்ந்துள்ளது ஓர் ஆண்டுக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"முன்பு இருந்ததைவிட இப்போது ஆதாரம் வலுவாக உள்ளது" என்று போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேரசிரியரான சேஷாத்ரி நடத்தூர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனைகளைவிட அதிகளவிலான சோதனைகளைச் செய்துள்ளோம். அவற்றில் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த மாறுப்பட்ட தரவுகள் அனைத்தும் உண்மை என்றும், எங்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தரவுப் பிசகல் இல்லை என்ற நம்பிக்கையையும் வலுவாக்கியுள்ளது," என்றார் அவர்.

விசித்திரமான முடிவுகள்



இதுவரை கிடைத்த தரவுகள், இதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும், ஸ்காட்லாந்து முன்னணி வானியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கேத்தரின் ஹேமன்ஸின் கவனத்தை இதன் பக்கம் ஈர்த்துள்ளது.

"நாம் நினைத்ததைவிட இந்த இருண்ட ஆற்றல் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

"கடந்த 2024ஆம் ஆண்டு கிடைத்த தரவுகள் மிகவும் புதிதாக இருந்ததால், இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடம் நிறைய தரவுகள் உள்ளன. நமக்குக் கிடைத்த தரவுகளில் இருக்கும் விலகல் சரியாகின்றதா அல்லது மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்பை நோக்கி நமது பயணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்" என்றும் கேத்தரின் ஹேமன்ஸ் குறிப்பிட்டார்.
மாறுபட்ட தரவுகள் கிடைக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, அது "யாருக்கும் தெரியாது" என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார்.



புதிதாகக் கிடைத்த முடிவுகள் சரியானவை என்றால், இதை ஏற்படுத்தும் ஆற்றலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தம் புதிய கோட்பாடு ஒன்று உருவாகலாம், இது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்."

மேற்கூறிய டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தோராயமாக 5 கோடி கேலக்ஸிகளையும் மற்ற ஒளி நிறைந்த பொருட்களையும் கணக்கிடும். இதன் மூலமாக அவர்களின் கணக்கீடுகள் சரியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.

"இந்தப் பிரபஞ்சமே அது செயல்படும் வழிமுறையை நம்மிடம் சொல்லும். ஒருவேளை நாம் நினைத்ததைவிட அதன் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதை அது நமக்கு உணர்த்துகிறதா என்பதை நாம் அறிய வேண்டும்," என்கிறார் கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே குயூ.

இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். யூக்லிட் என்பது ஒரு விண்வெளி தொலைநோக்கி. இது DESI-ஐ விட இன்னும் நுணுக்கமான கணக்கீடுகளைக் கொடுக்கக்கூடியது. 2023ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியில் ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் டர்ஹாம், யு.சி.எல். மற்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் உள்பட 70க்கும் மேற்பட்ட நிறுவங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tuesday, October 17, 2023

சிந்து சமசவெளிநாகரிக மக்கள் பேசிய மொழி எது? 5200 ஆண்டு பழைய கல்லறையில் எழுத்துக்கள் கண்டுபிடிப்ப.

 சிந்து சமசவெளிநாகரிக மக்கள் பேசிய மொழி எது? 5200 ஆண்டு பழைய கல்லறையில்  எழுத்துக்கள் கண்டுபிடிப்பு


இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றுக்கு சொந்தமான ஒரு விரிவான கல்லறை தளத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்கல் இனிஹ கல்லறையில் தரக்கூடுமா என்பதை பற்றி பதிவு இது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் அந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில் மணல் மண் குன்று ஒன்றை அகழ்வாராய்ச்சி செய்ய தொடங்கினர்.

ஆரம்பத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கிய ஒரு இரு நாளில்  அது ஒரு பண்டைய  குடியிருப்பு பகுதி என்று நினைத்தோம்.ஒரு வாரத்திற்குள் அது ஒரு கல்லறை தளம் என்று உணர்ந்தோம் என்று அகழ்வாராய்ச்சியை வழிநடத்திய கேரள பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்லியல் அறிஞர் ராஜேஷ் எஸ் வி கூறுகிறார்.

மூன்று கட்டங்களாக 150 இந்திய சர்வதேச ஆராச்சியாளர்கள் இந்த 40 ஏக்கர் பரப்பளவிலான தளத்தை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமூகத்தை சேர்ந்த குறைந்தது 500 கல்லறைகள் இந்த தளத்தில் இருப்பதாக இப்போது ஆராச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஹரப்பா நாகரிகம் என்றும் அளிக்கப்படும் இந்த சமூகம் சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடமேற்கு இந்திய மற்றும் பாகிஸ்தானில் சூடு செங்கல் நாகரிகங்களில் வாழ்ந்த எளிமையான விவசாயிகள் மற்றும் வணிகர்களால் நிறுவப்பட்டது.இந்த நாகரிகம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானில் 2000 தளங்கள் வரை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் 


குஜராத்தில் உள்ள கதீய கிராமத்திற்கு அருகில் உள்ள விரிவான கல்லறை தளம் இதுவரை கண்டுபிக்கப்பட்ட இந்த சமூகத்தின் மிகப்பெரிய நகர நாகரிகத்திற்கு முந்தைய கல்லறை தளமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இது சுமார் 500 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.இதனால் இங்குள்ள மிகப் பழமையான கல்லறைகள் சுமார் 5200 ஆண்டுகள் பழமையானவை.

இதுவரையிலான அகழ்வாராச்சிகள் ஒரே ஒரு முழுமையான ஆண் மனித எலும்புக்கூட்டையும்,மண்டை ஓடு துண்டுகள்,எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை கொடுத்து உள்ளன.

ஆய்வாளர்கள் கல்லறை பொருட்களின் வரிசையையும் கண்டுபிடித்துள்ளனர்.100 கும் மேற்பட்ட வளையல்கள் மற்றும் 27 ஓடுகளால் ஆன மணிகள் ,பீங்கான் பாத்திரங்கள் கிண்ணங்கள்,தட்டுகள்,பானைகள் சிறிய குடங்கள் குவளைகள்,களிமண் பானைகள்,தண்ணீர் கோப்பைகள் மற்றும் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கல்லறைகளில் தனித்துவமான அம்சங்கள் உள்ளன.இதில் வெவேறு திசைகளில் சுட்காட்டும் கல்லறை குழிகளும் அடங்கும்.சில முட்டை வடிவமானவை,மற்றவை செவ்வக வடிவமானவை.குழந்தைகள் புதைக்கப்பட்ட சிறிய கல்லறைகள் உள்ளன.உடல்கள் மல்லாந்து வைக்கப்பட்டுள்ளன.ஆனால் அமில மண் காரணமாக பெரும்பாலான எலும்புகள் கரைந்துவிட்டன.

இது மிகவும் குறிப்படத்தக்க கண்டுபிடிப்பு என்று மச்சிகனில் உள்ள ஆல்பியன் கல்லுரியில் மானுடவியல் பேராசிரியரான பிராட் சேஸ் கூறுகிறரர்.

இன்றிய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள சிந்து தளங்களின் முந்தைய அகழ்வாராய்ச்சிகள்  சிந்து மக்களின் கல்லறை வழங்கங்கள் பற்றி சில தகவல்களை வழங்குகின்றன.

எகிப்த் மற்றும் மெசபடோமியாவில் உள்ள மேல் தட்டு மக்களின் இறுதி சடங்குகளைப் போலல்லாமல் இவர்களின் இறுதி இறுதி சடங்குகள் எளிமையானவை.இறந்தவர்களுடன் எந்த நகைகளும் ஆயுதங்களும் வைக்கப்படவில்லை.

இங்கு பெரும்பாலான உடல்கள் துணியால் சுற்றி செவ்வக வடிவிலான மர பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.கல்லறை குழி பெரும்பாலும்  மண்பாண்ட பொருட்களால் நிரப்பப்பட்டிருக்கும் பின்னர் பெட்டி அதில் இறக்கப்படும் என்று விஸ்கன்சின் மடிசன் பல்கலைக்கழகத்தை சார்ந்த சிந்து சமவெளி  நாகரிகத்தின் அறிஞரான ஜொனாதன் மார்க் கெனோயர் கூறுகிறார்.

கல்லறைகளில் அதிகமான செல்வத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அவர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிலருக்கு மூட்டுவலி மற்றும் உடல் அழுத்தத்திற்கான அறிகுறிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் நன்றாக உணவளிக்கப்பட்ட மற்றும் ஆரோக்யமானவர்களாக இருந்தனர் என்பதை குறிக்கிறது.

ஆனால் குஜராத்தில் உள்ள இந்த மாபெரும் கல்லறை தளத்தின் மர்மம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை 

அறிவியலாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு தற்செயலானது.கேரள பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள் குழுவை கிராம தலைவர் ஒருவரை அழைத்து சென்றபோது அவர் அவர்களுக்கு அந்த தளத்தை காண்பித்தனர்.

400 பேர் கொண்ட சிறிய கிராமமான கதியாவிலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் அது இருந்தது.அவர்கள் தங்கள் வாழவதாரத்திற்கு மழை நீரை நம்பி நிலக்கடலை பருத்தி மற்றும் ஆமணக்கு பயிரிட்டனர்.அவர்களில் சிலரின் பண்ணைகள் கல்லறைக்கு அருகில் இருந்தன.


இப்படி மழைக்கு பிறகு சில மட்பாண்டங்களும் பிற பொருட்களும் மேற்பரப்புக்கு வருவதை பார்க்கலாம்.சிலர் இங்கு பேய்கள் இருப்பதாக  சொல்லுவார்கள்.ஆனால் நாங்கள் இவ்வளவு பெரிய கல்லறைக்கு அருகில் வசிப்பதாக எங்களுக்கு தெரியாது என்று முன்னாள் கிராமத் தலைவர் நாராயண் பாய் ஜஜானி கூறினார்.

இப்போது ஒவொரு ஆண்டும் உலகம் முழுவதிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் எங்கள் கிராமத்திற்கு வருகிறார்கள்.இங்கு புதைக்கப்பட்ட மக்களை பற்றி அறிய முயற்சிக்கிறார்கள்.

குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய கல்லறைகளில்  என்ன ரகசியங்கள் உள்ளன இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்?


மேலும் இந்தக் கல்லறைகளில் காணப்படும் லாபீஸ் லாசுலி என்னும் நீல கற்கள் தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தது என்று கருதும்போது இது நாடோடி பயணிகளுக்கான புனித  கல்லறை தளமாக செய்லபட்டிருக்க முடியுமா ?அல்லது இறந்தவர்களின் எலும்புகள் தனித்தனியாக புதைக்கப்பட்ட இரண்டாம் நிலை கல்லறை தளமாக இது செயல்பட்டிருக்க முடியுமா?

கெனோயர் இந்த கல்லறை தளத்துடன் தொடர்புடைய குடியிருப்புகள் இருக்க வேண்டும்.ஆனால் அவை அதிநவீன குடியிருப்புகளின் கீழ் இருக்கலாம் அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.கல்லறைகள் நன்றாக வரையறுக்கப்பட்ட கல் சுவர்களுடன் கட்டப்பட்டிருப்பது மக்கள் கற்களை கொண்டு கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததை குறிக்கிறது.மேலும் இது போன்ற கல் கட்டிடங்கள் மற்றும் சுவர்களால் சூழப்பட்ட குடிருப்புகள் கல்லறை தளத்திலிருந்து 19-30 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட கூடும். 

சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய மர்மங்கள் நீடிக்கின்றன.உதாரணமாக இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை.இங்கு குளிர்காலத்தில் கதியா அருகேயுள்ள கல்லறைக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என்று இந்த குழு தீர்மானித்துள்ளது.

பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு  இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்ற...